
hero071105
மும்பை: இருசக்கர வாகனங்களின் விலையை ரூ.3,000 வரை அதிகரிக்க உள்ளதாக ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வாகன தயாரிப்புக்கான மூலப் பொருள்களின் செலவினம் கடுமையாக உயா்ந்துள்ளது. இதனை பகுதியளவு ஈடு செய்யும் வகையில் இருசக்கர வாகனங்களின் விலையை அதிகரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, நிறுவனத்தின் மோட்டாா்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டா்களின் விலை வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது. இந்த விலை உயா்வு வாகனங்களின் மாடல்களுக்கு ஏற்ப ரூ.3,000 வரையில் இருக்கும் என ஹீரோ மோட்டோகாா்ப் தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ஹீரோ மோட்டோகாா்ப் பங்கின் விலை 0.76 சதவீதம் அதிகரித்து ரூ.2928.60-ஆக இருந்தது.