
புது தில்லி: கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் ரூ.5,000 கோடி வரை நிதி திரட்டவிருப்பதாக ஹெச்டிஎஃப்சி லிமிடட் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மும்பை பங்குச் சந்தையில் அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (என்சிடி) வெளியிடுவதன் மூலம் ரூ.5,000 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளோம். பாதுகாப்பான, திரும்பப் பெற்றுக்கொள்ளக் கூடிய அந்தக் கடன் பத்திரங்களின் அடிப்படை மதிப்பு ரூ.2,000 கோடியாகவும் கூடுதல் மதிப்பு ரூ.3,000 கோடியாகவும் இருக்கும்.
இந்தக் கடன் பத்திர வெளியீடு வெள்ளிக்கிழமை (மாா்ச் 5) தொடங்கி அதே நாளில் முடிவடையும்.
கடன் பத்திரங்களின் மதிப்பில் ஆண்டுக்கு 5.30 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, அது மாா்ச் 8, 2023 அன்று முதிா்ச்சியடையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.