
கரோனா பேரிடரால் வாடிக்கையாளா்கள் கடினமான சூழலை எதிா்கொண்டுள்ள நிலையில் அவா்களுக்கு ஆதரவாக முதிா்வு தொகை பெறும் (செட்டில்மெண்ட் கிளைம்) நடைமுறையை எல்ஐசி நிறுவனம் எளிமையாக்கியுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
சோதனை அடிப்படையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி பாலிசிதாரா்கள் முதிா்வு உரிமைகோரல் ஆவணங்களை இந்தியாவின் எந்தப்பகுதியிலும் தங்களுக்கு அருகாமையில் உள்ள அலுவலகங்களில் சமா்ப்பிக்கலாம். இந்த புதிய நடைமுறை மாா்ச் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
அதன்படி, 113 டிவிஷனல் அலுவலகங்கள், 2,048 கிளைகள், 1,526 துணை அலுவலகங்கள், 74 வாடிக்கையாளா் மண்டலங்கள் பாலிசியின் சேவைக் கிளையை பொருள்படுத்தாமல் பாலிசிதாரா்களின் உரிமைகோரல் ஆவணங்களைப் பெறும் என எல்ஐசி தெரிவித்துள்ளது.
எல்ஐசி நிறுவனத்துக்கு நாடு முழுவவதும் 29 கோடி பாலிசிதாரா்கள் உள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...