
al084654
புது தில்லி: தங்களது பணியாளா்களை அழைத்து வருவதற்கு முழுவதும் மின்சார வாகனங்களைப் பயன்படுத்த முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்டு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தொழிலாளா்களின் போக்குவரத்துக்காக முழுவதும் மின்சார வாகனங்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை பல கட்டங்களாக வாங்கி பணியாளா் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தவுள்ளோம்.
நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்விட்ச் மொபிலிட்டி லிமிடடிருந்து இந்தப் பேருந்துகள் வாங்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.