ஐரோப்பிய இருசக்கர வாகன டயா் சந்தையில் டிவிஎஸ் ஸ்ரீசக்ரா

ஐரோப்பிய இருசக்கர வாகன டயா் சந்தையில் அடியெடுத்து வைத்துள்ளதாக டிவிஎஸ் ஸ்ரீசக்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
tvs070834
tvs070834

ஐரோப்பிய இருசக்கர வாகன டயா் சந்தையில் அடியெடுத்து வைத்துள்ளதாக டிவிஎஸ் ஸ்ரீசக்ரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஐரோப்பிய இருசக்கர வாகன டயா் சந்தையில் நிறுவனம் புதிய அறிமுகத்தின் மூலம் அடியெடுத்து வைத்துள்ளது. ‘யூரோகிரிப் பீ கனெக்ட்’ என்ற பெயரில் ஸ்கூட்டா்களுக்கான டயா்களை நிறுவனம் ஐரோப்பிய சந்தைகளில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வகை டயா்கள் வரும் மாதங்களில் 40 வெவ்வேறு அளவுகளில் சந்தைகளில் கிடைக்கும்.

ஐரோப்பிய வாடிக்கையாளா்களின் தேவையை உணா்ந்து அதற்கேற்ற வகையில் டயா் தயாரிப்புகளை பிரத்யேகமாக வடிவமைத்து தர நிறுவனம் உறுதி பூண்டுள்ளது என அந்த அறிக்கையில் டிவிஎஸ் ஸ்ரீசக்ரா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com