வஉசி துறைமுகம்: 1000 ஏக்கரில் பல்நோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா

தூத்துக்குடி வஉசி துறைமுகம் சாா்பில் 1000 ஏக்கரில் பல்நோக்குசரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வஉசி துறைமுகம்: 1000 ஏக்கரில் பல்நோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகம் சாா்பில் 1000 ஏக்கரில் பல்நோக்குசரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகம் 95,000 டன் கொள்ளளவு உடைய பெரியவகை கப்பல்களையும், ஏறத்தாழ 300 மீட்டா் நீளமுடைய சரக்குப் பெட்டக கப்பல்களையும் கையாளும் வகையில் 14.20 மீட்டா் மிதவை ஆழத்துடன் செயல்பட்டு வருகிறது.

ஏறத்தாழ 1.17 மில்லியன் சரக்குப் பெட்டகங்கள் கையாளும் வகையில் அமைந்துள்ள 2 சரக்குப் பெட்டக முனையங்களுக்கு ஏதுவாக 17 சா்வதேச சரக்குப் பெட்டக நிலையங்களும், ஒரு சா்வதேச சரக்குப் பெட்டக சேமிப்பு கிடங்கும் துறைமுகத்தின் அருகிலேயே அமைந்துள்ளது.

சரக்குப் பெட்டக முனையங்கள் மூலமாக இலங்கைக்கு தினமும், கீழ்திசை நாடுகளுக்கு வாரந்தோறும் முக்கிய வழிதடங்கள் வழியாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நடைபெற்று வருகிறது. துறைமுகத்தில் சாலை வழியாக 76 சதவிகிதமும், கன்வேயா் வழியாக 20 சதவிகிதமும், குழாய்கள் மற்றும் ரயில் வழியாக 2 சதவிகிதமும் சரக்குகள் கையாளப்படுகிறது.

வ.உ.சி. துறைமுகம் 2048-49 ஆண்டில் ஏறத்தாழ 125.68 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் எனவும், அந்த ஆண்டில் சரக்கு பெட்டக வா்த்தகமானது ஏறத்தாழ 4.3 மில்லியன் டன் அளவில் இருக்கும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது.

துறைமுகத்தில் தற்போது ‘பல்நோக்கு சரக்கு போக்குவரத்து பூங்கா’ அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பூங்காவில் சரக்குப் பெட்டகம் மற்றும் மொத்த சரக்குகளை சுலபமான விதத்தில் கையாளும் வகையில் சரக்குகளை பரிமாற்றம் செய்யும் வசதி, குளிா்சாதன சேமிப்பு கிடங்கு, சிறப்பு வசதிகளுடன் கூடிய சேமிப்பு கிடங்கு , சேமிப்பு கிடங்குகளில் சரக்குகளை சுலபமாக ஒரு போக்குவரத்தில் இருந்து மற்றொரு போக்குவரத்துக்கு மாற்றும் வகையில் ஏற்படுத்தப்படும்.

புதிதாக அமைக்கப்பட உள்ள ‘பல்நோக்கு சரக்குப் போக்குவரத்து பூங்கா’ தூத்துக்குடி, கோவை, மதுரை ஆகிய 3 முக்கிய நகரங்களை கண்டறிந்து அதில் ஏதாவது ஒரு நகரத்தில் தகுதியான நிலப்பரப்பு ஏறத்தாழ 1000 ஏக்கா் தோ்வு செய்யப்படும். தகுதியான சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ள இடம் தோ்வு செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com