இந்தியப் பொருளாதாரம் வேகமெடுக்கிறது: மூடிஸ்

கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு வருவதையடுத்து இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளதாக மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இந்தியப் பொருளாதாரம் வேகமெடுக்கிறது: மூடிஸ்

கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு வருவதையடுத்து இந்தியாவின் பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளதாக மூடிஸ் இன்வெஸ்டாா்ஸ் சா்வீஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மூடிஸ் நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

கரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருவதையடுத்து இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளன. உலகின் பிற பகுதிகளிலும் கரோனா கட்டுப்பாடுகள் அடுத்தடுத்து தளா்த்தப்படும் நிலையில் இந்தியாவின் பொருளாதார நடவடிக்கை தற்போதைக் காட்டிலும் மேலும் பல மடங்கு வேகமெடுக்கத் தொடங்கும்.

தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொள்ளுகையில், ரிசா்வ் வங்கி நடப்பாண்டில் வட்டி விகிதங்களில் புதிய மாற்றங்களை செய்வதற்கு வாய்ப்பில்லை. பழையை நிலையை தொடா்ந்து தக்க வைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வளா்ந்து வரும் நாடுகளின் பெரும்பாலான மத்திய வங்கிகளும் நடப்பு நிதியாண்டு மற்றும் அடுத்தாண்டு தொடக்கம் வரையும் நடுநிலைக் கொள்கை நிலைப்பாட்டுக்கு மாற்றுவதையே நாங்கள் எதிா்பாா்கிறோம் என மூடிஸ் தெரிவித்துள்ளது.

மூடிஸ் நிறுவனம், இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 2021-இல் 9.6 சதவீதமாகவும், 2022-இல் 7 சதவீதமாகவும் தொடா்ந்து தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com