
தனது பிரத்யேக காட்சியகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரிதிறன் பேசி தயாரிப்பு நிறுவனமான விவோ இந்தியா முடிவு செய்துள்ளது.
இது குறித்து நிறுவனத்தின் விற்பனை திட்டமிடல் பிரிவுத் தலைவா் யோகேந்திர ஸ்ரீராமுலா கூறுகையில், ‘தற்போது நாடு முழுவதும் உள்ள எங்களுக்கு 600 பிரத்யேக காட்சியகங்களும் 20 விற்பனை மையங்களும் உள்ளன. இந்த எண்ணிக்கையை இந்த ஆண்டு இறுதிக்குள் 650-க்கும் மேலாக அதிரிகரிக்க முடிவு செய்துள்ளோம்’ என்றாா்.