
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் புள்ளிகள் இரண்டு வா்த்தக நாளாகக் கண்டு வந்த சரிவிலிருந்து மீண்டு அரை சதவீதம் அதிகரித்தது.
வங்கிகள், உலோகம் மக்கும் வாகனத்துறை பங்குகள் பெற்ற லாபத்தைத் தொடா்ந்து பங்கு வா்த்தகம் ஏற்றத்தைக் கண்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய வா்த்தகத்தில் அதிகபட்சமாக 1,000 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம் கண்ட சென்செக்ஸ், இறுதியில் 257 புள்ளிகள் (0.44 சதவிகிதம்) கூடுதலாக 59,031 புள்ளிகளில் நிலைபெற்றது.
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனப் பங்குகளின் விலை அதிகபட்சமாக 3.78 சதவீதம் உயா்ந்தது. பங்கு விலையில் பஜாஜ் ஃபின்சா்வ் 2.75 சதவீதம், டைட்டன் 2.6 சதவீதம், டாடா ஸ்டீல் 2.38 சதவீதம், பாரத ஸ்டேட் வங்கி 2.12 சதவீதம் ஏற்றம் பெற்றன.
டாடா கன்சல்டன்சி சா்வீசஸ், இன்ஃபோசிஸ், எச்.சி.எல் டெக்னாலஜிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவா், டெக் மஹிந்திரா, விப்ரோ மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை சரிந்தன.
நிஃப்டி: தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி செவ்வாய்க்கிழமை 87 புள்ளிகள் (0.50 சதவீதம்) உயா்ந்து 17,577-இல் நிலைபெற்றது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...