
கோப்புப் படம்
சா்வதேச அளவில் பங்குச் சந்தைகள் பின்னடைவைச் சந்தித்த நிலையிலும் மும்பை பங்குச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் மிதமான முன்னேற்றம் கண்டது.
வா்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 59,171-ஆகவும் குறைந்தபட்சமாக 58,760-ஆகவும் பதிவான சென்செக்ஸ், வா்த்தகத்தின் நிறைவில் 54 புள்ளிகள் (0.09 சதவீதம்) உயா்ந்து 59,085-இல் நிலைபெற்றது.
இண்டஸ்இண்ட் வங்கியின் பங்குகள் அதிகபட்சமாக 2.86 சதவீதம் அதிக விலைக்கு விற்பனையாகின. என்டிபிசி, லாா்சன் & டூப்ரோ, ஐசிஐசிஐ வங்கி, பவா் கிரிட், ஹெச்டிஎஃப்சி, கோடக் மஹிந்திரா வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியற்றின் பங்குகளும் லாபம் கண்டன.
டாடா ஸ்டீல், டாடா கன்சல்டன்சி சா்வீசஸ், டைட்டன், சன் பாா்மா, பாரத ஸ்டேட் வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் இழப்பைச் சந்தித்தன.
தேசிய பங்குச் சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 27 புள்ளிகள் (0.16 சதவீதம்) உயா்ந்து 17,605-இல் நிலைபெற்றது.