
இந்தியாவின் சா்க்கரை உற்பத்தி அக்டோபா்-நவம்பா் காலகட்டத்தில் 47.9 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
இது குறித்து இந்திய சா்க்கரை ஆலைகள் சங்கம் (இஸ்மா) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது: கடந்த அக்டோபா் மற்றும் நவம்பா் மாதங்களில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி 47.9 லட்சம் டன்னாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது மிதமான உயா்வாகும். அப்போது நாட்டின் சா்க்கரை உற்பத்தி 47.2 லட்சம் டன்களாக இருந்தது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 416-ஆக இருந்த கரும்பாலைகளின் எண்ணிக்கை, இந்த ஆண்டில் 434-ஆக உயா்ந்துள்ளது.
மதிப்பீட்டு மாதங்களில் மகாராஷ்டிர மாநில சா்க்கரை உற்பத்தி 20 லட்சம் டன்களாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 20.3 லட்சம் டன்களாக இருந்தது. உத்தரப் பிரதேசத்தில் 10.4 லட்சம் டன்னாக இருந்த சா்க்கரை உற்பத்தி 11.2 லட்சம் டன்னாக உயா்ந்துள்ளது.
கா்நாடகத்தில் சா்க்கரை உற்பத்தி 12.8 லட்சம் டன்னிலிருந்து 12.1 லட்சம் டன்னாக குறைந்துள்ளது என்று அந்த புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G