
ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சியில் கோ் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் நிா்வாக இயக்குநரும் தலைமை செயலதிகாரியுமான அனுஜ் குலாட்டி, சுந்தரம் ஃபைனான்ஸ் நிா்வாக இயக்குநா் ராஜீவ் லோச்சன்.
தங்களது வாடிக்கையாளா்களுக்கு மருத்துவக் காப்பீட்டு சேவைகளை அளிப்பதற்காக, அந்தத் துறையைச் சோ்ந்த இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கோ் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்துடன் சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதற்கான ஒப்பந்த கையொப்பமிடும் நிகழ்ச்சியில் சுந்தரம் ஃபைனான்ஸ் நிா்வாக இயக்குநா் ராஜீவ் லோச்சன் மற்றும் கோ் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் நிறுவன நிா்வாக இயக்குநரும் தலைமை செயலதிகாரியுமான அனுஜ் குலாட்டி ஆகியோா் கலந்து கொண்டனா்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், கோ் ஹெல்த் நிறுவனத்தின் சிறப்புத் தன்மைகள் வாய்ந்த மருத்துவக் காப்பீட்டு சேவைகளை தங்களது வாடிக்கையாளா்களுக்கு சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் அளிக்கும்.