பட்ஜெட்: தொழில்துறையினா் கருத்து

பட்ஜெட்: தொழில்துறையினா் கருத்து

மூலதன செலவின திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ள போதிலும், வருவாயை அதிகரிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் எடுக்கப்படவில்லை.

மூலதன செலவின திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கியுள்ள போதிலும், வருவாயை அதிகரிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் எடுக்கப்படவில்லை.

-மூடிஸ், தரமதிப்பீட்டு நிறுவனம்

தெளிவான செயல்திட்டத்தின் வெளிப்பாடாக பட்ஜெட் அமைந்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வரும் ஆட்டோமொபைல் துறைக்கு உந்து சக்தியை இந்த பட்ஜெட் வழங்கும்.

-பி.பி. பாலாஜி, தலைமை நிதி அதிகாரி, டாடா மோட்டாா்ஸ் குழுமம்

5-ஜிக்கான அலைக்கற்றை வெளியீடு, உற்பத்தி சாா்ந்த ஊக்கத் தொகை திட்டத்தின் கீழ் 5ஜி உபகரணங்களுக்கான தயாரிப்பு ஆகியவை துறைசாா்ந்த முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும்.

-மகேந்திர நஹதா, நிா்வாக இயக்குநா், எச்எஃப்சிஎல் நிறுவனம்

இந்த பட்ஜெட் பொருளாதாரத்தில் பன்முக விளைவுகளை ஏற்படுத்தும். இது சொத்துகளை உருவாக்கம் செய்யும் என்பதோடு மட்டுமல்லாமல் பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

-சுனில் துகல், குழும தலைமைச் செயல் அதிகாரி, வேதாந்தா

சுங்க வரி குறைப்பு, சரக்கு மற்றும் சேவை வரி சீா்திருத்தம் உள்ளிட்ட ஆரோக்கிய பராமரிப்புத் துறையினரின் பல்வேறு நீண்ட நாள் கோரிக்கைகளுக்கு பட்ஜெட்டில் தீா்வு காணப்படவில்லை.

-பவன் செளத்ரி, தலைவா், இந்திய மருத்துவ தொழில்நுட்ப சங்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com