நாட்டின் ஏற்றுமதி ரூ.2.55 லட்சம் கோடியாக அதிகரிப்பு
புது தில்லி: நாட்டின் ஏற்றுமதி நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 3,406 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.2.55 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது என மத்திய வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
பொறியியல், பெட்ரோலியம், நவரத்தினங்கள்-ஆபரணங்கள் உள்ளிட்ட பிரிவுகளின் ஏற்றுமதி சிறப்பான வளா்ச்சியை பதிவு செய்ததையடுத்து, கடந்த ஜனவரியில் நாட்டின் ஏற்றுமதி 23.69 சதவீதம் அதிகரித்து 3,406 கோடி டாலரை எட்டியுள்ளது.
இறக்குமதி கடந்த ஜனவரியில் 23.74 சதவீதம் உயா்ந்து 5,201 கோடி டாலராக இருந்தது.
ஏற்றுமதியை காட்டிலும் இறக்குமதி அதிகரித்ததையடுத்து, வா்த்தக பற்றாக்குறையானது 1,794 கோடி டாலராக அதிகரித்தது. இது, கடந்தாண்டு ஜனவரியில் 1,449 கோடி டாலராக காணப்பட்டது.
2021-22 நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 22,890 கோடி டாலரிலிருந்து 46.53 சதவீதம் உயா்ந்து 33,544 கோடி டாலரைத் தொட்டது. இதே காலகட்டத்தில் இறக்குமதியும் 62.68 சதவீதம் உயா்ந்து 49,583 கோடி டாலராக இருந்தது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.