கரடிப் பிடியில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் கடும் சரிவு

இந்த வாரத்தின் கடைசி பங்குச் சந்தை நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. 

பங்குச் சந்தை வணிகம் கடந்த திங்கள்கிழமையிலிருந்து சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மதிப்புகள் வீழ்ச்சியால்  தொடர் இறக்கத்தை அடைந்துவந்த நிலையில் இன்றும் சரிவுடன் நிறைவடைந்துள்ளது.

நேற்று(ஜன.20) 59,464.62 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 59,039.37 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 427.44 புள்ளிகளை இழந்து 59,037.18 புள்ளிகளுடன் நிலைபெற்றது.

அதேபோல், 17,757.00 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,613.70 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 139.85  புள்ளிகள் சரிந்து 17,617.15 புள்ளிகளில் நிலைபெற்றது.

மேலும், சென்செக்ஸ் கடந்த 4 நாள்களில் 2300 புள்ளிகளை இழந்து பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com