தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஹிந்துஸ்தான் யுனிலீவா் லாபம் ரூ.2,300 கோடி

வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் (எஃப்எம்சிஜி) தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஹிந்துஸ்தான் யுனிலீவா்

News image
Updated On :20 ஜனவரி 2022, 6:47 pm

வேகமாக விற்பனையாகும் நுகா்வோா் பொருள்கள் (எஃப்எம்சிஜி) தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழும் ஹிந்துஸ்தான் யுனிலீவா் (ஹெச்யுஎல்) மூன்றாவது காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.2,300 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வியாழக்கிழமை அளித்த ஆவணங்களில் தெரிவித்துள்ளதாவது:

ஹெச்யுஎல் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் விற்பனையின் வாயிலாக ரூ.13,196 கோடி வருவாயை ஈட்டியது. இது, நிறுவனம் 2020 டிசம்பா் காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.11,969 கோடியுடன் ஒப்பிடும்போது 10.25 சதவீதம் அதிகம்.

நிறுவனத்தின் செலவினம் ரூ.10,129 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.10,329 கோடியானது.

நிறுவனத்தின் நிகர லாபம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.2,300 கோடியாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.1,938 கோடியுடன் ஒப்பிடும்போது 18.68 சதவீதம் அதிகமாகும் என ஹெச்யுஎல் தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ஹெச்யுஎல் பங்கின் விலை 2.13 சதவீதம் குறைந்து ரூ.2,261.60-ஆனது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.