நத்திங் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ‘நத்திங் 1’ ஸ்மார்ட்போனை நேற்று செவ்வாய்க்கிழமை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
சிறந்த வடிவமைப்பு மற்றும் சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ள நத்திங்-1 ஸ்மார்ட்போன் உலகம் முழுவதும் நேற்று செவ்வாய்க்கிழமை அறிமுகமாகியுள்ளது.
‘நத்திங் 1’ சிறப்பம்சங்கள் :
* 6.55 இன்ச் அளவுகொண்ட ஓஎல்ஈடி எச்டி திரை
* ஸ்னாப்டிராகன் 778 ஜி பிளஸ் புராசசர்
* 8 மற்றும் 12ஜிபி ரேம், 128 மற்றும் 256 ஜிபி மெமரி
* பின்பக்கம் 50 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும், முன்பக்க செல்ஃபி கேமரா 16 எம்பி பொருத்தப்பட்டுள்ளது.
* 4500 எம்ஏஎச் பேட்டரி வசதி
* ஆண்டிராய்ட் 12, நத்திங் ஓஎஸ் இயங்குதளம்
இந்தியாவில் இதன் விற்பனை விலை 8ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி திறன் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.32,999, 8ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி ரூ.35,999 மற்றும் 12ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ரூ.38,999-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.