சென்செக்ஸ் 1,432 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. ரூபாய் மதிப்பு கடும் சரிவு!

வாரத்தின் முதல்நாள் வர்த்தகத்தில் இந்திய பங்குசந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்செக்ஸ் 1432.52 புள்ளிகளும், நிஃப்டி 410.10 புள்ளிகளும் சரிந்தன.
சென்செக்ஸ் 1,432 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி.. ரூபாய் மதிப்பு கடும் சரிவு!

மும்பை (மகாராஷ்டிரா): வாரத்தின் முதல்நாள் வர்த்தகத்தில் இந்திய பங்குசந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்செக்ஸ் 1432.52 புள்ளிகளும், நிஃப்டி 410.10 புள்ளிகளும் சரிந்தன.

வாரத்தின் முதல்நாள் வர்த்தகம் தொடங்கியது முதல் இந்திய பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சியில் காணப்படுகிறது. காலை 9.28 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1432.52 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,432.52 புள்ளிகள் (2.64%) சரிந்து, 52,870.92 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

இதுபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 410.10 புள்ளிகள் (2.53%) குறைந்து 15,7791.70 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

முதல் வர்த்தகத்தில் இந்திய பங்குசந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்க பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்ததன் எதிரொலியாக இந்திய பங்குசந்தைகளும் வீழ்ச்சியில் காணப்படுகிறது.

அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்ததால் பங்குசந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.78 ஐ தாண்டியுள்ளது. அதன்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 36 காசு சரிந்து, புதிய உச்சமான ரூ.78.29-ஐ தொட்டுள்ளது.

பிஎஸ்இ ஆசியாவின் மிகப் பழமையான பங்குச் சந்தையாகும், மேலும் உலகின் 10 ஆவது பழமையான பங்குச் சந்தையாகும்.

நிஃப்டி என்பது ஒரு முக்கிய இந்திய பங்குச் சந்தைக் குறியீடு ஆகும், இது தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 50 பெரிய இந்திய நிறுவனங்களின் சராசரி எடையைக் குறிக்கிறது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் இரண்டு முக்கிய பங்கு குறியீடுகளில் இதுவும் ஒன்றாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com