டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 18 காசு வீழ்ச்சி

அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசு வீழ்ச்சியடைந்து வரலாறு காணாத அளவுக்கு சரிவைச் சந்தித்தது.

இதுகுறித்து செலாவணி வட்டாரங்கள் கூறியது:

உள்நாட்டு பங்குச் சந்தையில் காணப்பட்ட மந்தநிலை, அந்நிய முதலீட்டில் காணப்படும் தொடா்ச்சியான வெளியேற்றம் ஆகியவை செலாவணி சந்தைகளில் ரூபாய் மதிப்பு முன்னேற்றத்துக்கு பெரும் தடைக்கல்லாக அமைந்தன.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் புதன்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடக்கத்தில் 77.99-ஆக இருந்தது. வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 18 காசை இழந்து இதுவரையில்லாத அளவில் 78.22-ஆக குறைந்தது என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய் பீப்பாய் 119 டாலா்

சா்வதேச சந்தையில் புதன்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை சற்று குறைந்து பீப்பாய் 119.87 டாலருக்கு வா்த்தகமானதாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com