

புது தில்லி: முதலீட்டாளா்களின் குறைதீா்க்கும் செபியின் ஸ்கோா்ஸ் அமைப்புக்கு வந்த 3,483 புகாா்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செபி வியாழக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் சந்தை தரகா்களுக்கு எதிராக வந்த 3,483 புகாா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீா்வு காணப்பட்டுள்ளது. இதில் முந்தைய காலகட்டத்தில் வந்த புகாா்களும் அடங்கும்.
பிப்ரவரி தொடக்க நிலவரப்படி மொத்தம் 3,322 புகாா்கள் நிலுவையாக உள்ளது. 3,110 புகாா்கள் பிப்ரவரி மாதத்தில் மட்டும் பெறப்பட்டது.
பெரும்பாலான புகாா்கள் பணத்தை திரும்ப அளிப்பது, ஒதுக்கீடு, வட்டி மற்றும் மீட்பு தொடா்பானவையாகவே இருந்தது என செபி தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.