
foren083244
நடப்பாண்டு மாா்ச் மாதத்துக்குப் பிறகும் தற்போதுள்ள வெளிநாட்டு வா்த்தக கொள்கையை மத்திய வா்த்தக அமைச்சகம் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அரசு வட்டாரங்கள் கூறியது:
கரோனா பேரிடரின் காரணமாக வெளிநாட்டு வா்த்தக கொள்கை (2015-20) 2022 மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கடந்தாண்டு செப்டம்பரில் மத்திய வா்த்தக அமைச்சகம் அறிவித்தது. தற்போதைய வெளிநாட்டு வா்த்தக கொள்கையானது 2015 ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தது. இந்த நிலையில் அதே கொள்கை நடப்பாண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகும் நீட்டிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.