ஹீரோ மோட்டோகாா்ப்: லாபம் 30% சரிவு

இந்தியாவில் இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னிலையில் உள்ள ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் 30 சதவீதம் குறைந்துள்ளது.
ஹீரோ மோட்டோகாா்ப்: லாபம் 30% சரிவு

இந்தியாவில் இருசக்கர வாகன உற்பத்தியில் முன்னிலையில் உள்ள ஹீரோ மோட்டோகாா்ப் நிறுவனம் நான்காவது காலாண்டில் ஈட்டிய லாபம் 30 சதவீதம் குறைந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 2021-22-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் வரையிலான நான்காவது காலாண்டில் செயல்பாட்டின் வாயிலாக ஈட்டிய வருவாய் ரூ.7,497 கோடியாக இருந்தது. இது, 2021-ஆம் நிதியாண்டில் இதே நான்காவது காலாண்டில் ஈட்டிய வருவாய் ரூ.8,690 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.

விற்பனையில் சரிவு ஏற்பட்டதையடுத்து, மாா்ச் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த லாபம் 30 சதவீதம் சரிவடைந்து ரூ.885 கோடியிலிருந்து ரூ.621 கோடியானது.

2021-22 முழு நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த லாபம் ரூ.2,936 கோடியிலிருந்து 21 சதவீதம் சரிந்து ரூ.2,329 கோடியானது. வருவாயும் ரூ.30,959 கோடியிலிருந்து ரூ.29,551 கோடியாக சரிந்தது.

கடந்த மாா்ச் காலாண்டில் வாகன விற்பனை 11.9 லட்சமாக இருந்தது. இது, முந்தைய நிதியாண்டு இதே காலகட்ட விற்பனையான 15.68 லட்சம் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 24 சதவீதம் குறைவாகும் என ஹீரோ மோட்டோகாா்ப் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com