தமிழகத்தில் 2வது ஆலையைத் திறந்தது பாரதி சிமெண்ட்

சிமெண்ட் தயாரிப்பு நிறுவனமான பாரதி சிமெண்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட், தமிழகத்தின் அதன் பிராண்டை வலுப்படுத்த, நாட்டிலேயே இரண்டாவது தானியங்கி சிமெண்ட் டெர்மினல் ஒன்றைத் திறந்துள்ளது.
தமிழகத்தில் 2வது ஆலையைத் திறந்தது பாரதி சிமெண்ட்

சென்னை: தமிழகத்தில் இரண்டாவது ஆலையை பாரதி சிமெண்ட் நிறுவனம் செவ்வாய்க்கிழமை இன்று திறந்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது புதிய வகை சிமெண்ட் ஆன 'குயிக்செம்' அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், தனது முதல் ஆலையை 2018இல் மும்பையில் திறந்தது என தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள புதிய ஆலை ஆண்டுக்கு 0.75 மெட்ரிக் டன் திறன் கொண்ட முழுமையான தானியங்கி பேக்கிங் மற்றும் விநியோக வசதி உடன் 16 பணியாளர்களால் நிர்வகிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஆலையை விகாட் குழுமத் தலைவர், விகாட் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அனூப் குமார் சக்சேனா மற்றும் விளம்பரதார இயக்குநர் எம் ரவீந்தர் ரெட்டி ஆகியோர் திறந்து வைத்தனர். 

பாரதி சிமெண்ட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் என்பது பிரான்ஸை தளமாகக் கொண்ட விகாட் குழுமத்தின் கூட்டு முயற்சியாகும். இது சிமெண்ட் உற்பத்தியாளரின் இந்திய செயல்பாடுகளில் 51 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது. 

"புதிய முனையத்தில் முதலீடு செய்வதன் மூலம், இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்கான எங்கள் உறுதிப்பாட்டுடன் நாங்கள் இணைந்துள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com