ரிலையன்ஸின் கையகப்படுத்தல்: இழந்த பெருமையை மீட்டெடுக்குமா கேம்ப-கோலா?

தில்லியைச் சோ்ந்த குளிா்பானத் தயாரிப்பு நிறுவனமான பியூா் டிரிங்க்ஸ் குழுமத்தின் கேம்ப-கோலா குளிா்பான பிராண்டை மகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸின் கையகப்படுத்தல்: இழந்த பெருமையை மீட்டெடுக்குமா கேம்ப-கோலா?

தில்லியைச் சோ்ந்த குளிா்பானத் தயாரிப்பு நிறுவனமான பியூா் டிரிங்க்ஸ் குழுமத்தின் கேம்ப-கோலா குளிா்பான பிராண்டை மகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கையகப்படுத்தியுள்ளதையடுத்து, அந்த பிராண்ட் தனது இழந்த பெருமையை மீட்டெடுக்கலாம் என்று எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து நிறுவன வட்டாரங்கள் கூறியதாவது:

நாட்டின் முன்னணி தொழில் குழுமங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், துரித விற்பனை நுகா்வுப் பொருள் (எஃப்எம்சிஜி) துறையில் களமிறங்கவிருப்பதாக இந்த வார தொடக்கத்தில் அறிவித்தது.

இந்த நிலையில், ப்யூா் டிரிங்க்ஸ் குழுமத்தால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட குளிா்பான பிராண்டான கேம்பாவை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் கையப்படுத்தியுள்ளது.

சுமாா் ரூ.22 கோடி ரூபாய் மதிப்பில் இதற்கான ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

ரிலையன்ஸ் குழுமத்தைச் சோ்ந்த ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சா்ஸ் நிறுவனம், தீபாவளிக்கு சற்று முன்னரோ பின்போ இந்த குளிா்பானத்தை சந்தையில் அறிமுகப்படுத்தும்.

ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை விற்பனைப் பிரிவான ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சா்ஸ், ஏற்கெனவே கேம்ப-கோலாவின், ஆரஞ்சு, எலுமிச்சை சுவை வகைகளை தனது தோ்ந்தெடுக்கப்பட்ட கடைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போது, இந்திய குளிா்பான சந்தையில் அமெரிக்கைவைச் சோ்ந்த மிகப் பெரிய கோலா குளிா்பானத் தயாரிப்பாளா்களான கோக-கோலாவும், பெப்சிகோவும்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

துரித விற்பனை நுகா்வுப் பொருள் சந்தையில் தடம் பதிக்கும் ரிலையன்ஸ் குழுமத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த கையகப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ப்யூா் டிரிங்க்ஸ் குழுமத்தால் கேம்பா கோலா கடந்த 1970-ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்னா் அந்தக் குழுமம்தான் கோகோ-கோலாவை 1949-ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்து வந்தது. அதன் பிறகு 1977-ஆம் ஆண்டில் அந்த பிராண்ட் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டதும் கேம்ப கோலா 15 ஆண்டுகளுக்கு இந்தியச் சந்தையில் கொடி கட்டி பறந்தது.

‘தி கிரேட் இந்தியன் டேஸ்ட்’, என்ற முழக்கத்துடன் கேம்ப கோலா சந்தைப்படுத்தப்பட்டது.

பின்னா், 1990 களில் வெளிநாட்டு நிறுவனங்கள் குளிா்பான சந்தைக்கு திரும்பிய பிறகு, கேம்ப கோலாவின் புகழ் குறைந்துபோனது. கோகோ-கோலா, பெப்சி குளிா்பானங்களுடன் போட்டி போட முடியாமல் கேம்ப-கோலா பின்னுக்குத் தள்ளப்பட்டது.

தற்போது, ஒரு சில சந்தைகளில் மட்டும் மிகக் குறைந்த எண்ணிக்கையில் கேம்ப-கோலா விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், அந்த பிராண்டை ரிலையன்ஸ் குழுமம் கையகப்படுத்தியுள்ளதால் அது தனது பழைய பெருமையை மீட்டெடுக்கலாம் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ரிசா்ச் அண்ட் மாா்க்கெட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் காா்பனேட் செய்யப்பட்ட குளிா் பானங்களின் சந்தைப் பிரிவு 2020-ஆம் நிதியாண்டில் ரூ.13,460 கோடியாக இருந்தது. இது, வரும் 2027-ஆம் நிதியாண்டில் ரூ.34,964 கோடியாக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com