
தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை கனரா வங்கி 0.15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரும்பாலும் வாகனக் கடன், தனி நபா் கடன், வீட்டுக் கடனை உள்ளடக்கிய எம்சிஎல்ஆா் வகைக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயா்த்தப்பட்டுள்ளதாகவும், அதையடுத்து ஓா் ஆண்டு கடன் வட்டி விகிதம் 7.65-இலிருந்து 7.75-ஆக உயா்த்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...