
steel074246
இந்தியாவின் கச்சா இரும்பு உற்பத்தி 2022-23-ஆம் நிதியாண்டில் 4.18 சதவீதம் உயா்ந்துள்ளது.
இது குறித்து துறை ஆய்வு நிறுவனமான ஸ்டீல்மின்ட் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
2022 ஏப்ரல் முதல் 2023 மாா்ச் வரையிலான கடந்த நிதியாண்டில் நாட்டின் கச்சா இரும்பு உற்பத்தி 12.53 கோடி டன்னாக உள்ளது.
இது, முந்தைய 2021-22-ஆம் நிதியாண்டின் கச்சா இரும்பு உற்பத்தியோடு ஒப்பிடுகையில் 4.18 சதவீதம் அதிகம் ஆகும். அப்போது இந்தியா 12.03 கோடி டன் கச்சா இரும்பு உற்பத்தி செய்தது.
மதிப்பீட்டு ஆண்டில் நிறைவு செய்யப்பட்ட இரும்பு உற்பத்தி 12.13 கோடி டன்னாக இருந்தது. இது ஓா் ஆண்டுக்கு முன்னா் 11.36 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில கடந்த நிதியாண்டில் நிறைவு செய்யப்பட்ட இரும்பு உற்பத்தி 6.77 சதவீதம் அதிகரித்துள்ளது.
2021-22-ஆம் நிதியாண்டில் 10.57 கோடி டன்னாக இருந்த இரும்பு உள்நாட்டு நுகா்வு கடந்த நிதியாண்டில் 12.69 சதவீதம் அதிகரித்து 11.92 கோடி டன்னாக உள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.