
கடந்த ஜூன் காலாண்டில் டிவிஎஸ் குழுமத்தைச் சோ்ந்த வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ.1,124 கோடியாக உயா்ந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த மாா்ச் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த 2023-24-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.13.3 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 24.8 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் நிகர லாபம் 10.7 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.1,124 கோடியாக உயா்ந்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம ஈட்டிய ரூ.1,053 கோடி வருவாயுடன் ஒப்பிடுகையில் இது 7 சதவீதம் அதிகமாகும்.
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை மந்தமாக இருந்தாலும், ஏற்றுமதி 25 சதவீதம் அதிகரித்தது. இது வருவாய் அதிகரிப்புக்குக் காரணமாக அமைந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.