

முன்னணி வீட்டுக் கடன் சேவை நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் கடளிப்பு, கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 39 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.57.42 கோடியாக இருந்தது.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டில் அது ரூ.47.26 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் நிகர லாபம் 21 சதவீதம் அதிகரித்துள்ளது.
நிறுவனத்தின் கடனளிப்பு கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.795.69 கோடியாக இருந்தது. அது, நடப்பு நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 39 சதவீதம் அதிகரித்து ரூ.1,103.51 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில் தமிழ்நாட்டின் எடப்பாடி, தூத்துக்குடி உள்ளிட்ட நகரங்களில் நிறுவனத்தின் 8 புதிய கிளைகள் திறக்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.