

சென்னை: இந்துஜா குழுமத்தின் முன்னணி நிறுவனமான அசோக் லேலண்ட், நவம்பர் மாதத்தில் 14,053 வாகனங்களை விற்பனை செய்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் அதன் விற்பனையில் 3 சதவிகிதம் சரிவைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 14,561 வாகனங்களை அசோக் லேலண்ட் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 10 சதவிகிதம் சரிந்து 2023 நவம்பரில் 8,500 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
இருப்பினும், உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்ட இலகுரக வணிக வாகனங்களின் எண்ணிக்கை 2022 நவம்பரில் 5,087 யூனிட்டுகளிலிருந்து இந்த ஆண்டு நவம்பரில் 9 சதவிகிதம் அதிகரித்து 5,553 ஆக இருந்தது.
நவம்பர் 2023 வரையிலான ஒட்டுமொத்த விற்பனை 7 சதவிகிதம் அதிகரித்து 1,14,370-ல் இருந்து 1,22,092-ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் ஒட்டுமொத்த விற்பனை 8 சதவிகிதம் அதிகரித்து 76,936-ஆக உள்ளது.
2023 நவம்பர் வரை விற்பனையான இலகுரக வணிக வாகனங்கள் 5 சதவிகிதம் அதிகரித்து 43,014-லிருந்து 45,156-ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.