சரிவைக் கண்ட சா்க்கரை உற்பத்தி

நடப்பு சா்க்கரை ஆண்டின் முதல் 2 மாதங்களில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி 43.2 லட்சம் டன்னாகச் சரிந்துள்ளது.
sugar
sugar


புது தில்லி: நடப்பு சா்க்கரை ஆண்டின் முதல் 2 மாதங்களில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி 43.2 லட்சம் டன்னாகச் சரிந்துள்ளது.

இது குறித்து சா்க்கரை கூட்டுறவு ஆலைகளின் சம்மேளனம் (என்எஃப்சிஎஸ்எஃப்எல்) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2023 அக்டோபா் முதல் 2024-ஆம் ஆண்டு செப்டம்பா் வரையிலான நடப்பு சா்க்கரை ஆண்டின் முதல் 2 மாதங்களான கடந்த அக்டோபா் மற்றும் நவம்பரில் நாட்டின் சா்க்கரை உற்பத்தி 43.2 லட்சம் டன்னாக உள்ளது.

முந்தைய சா்க்கரை ஆண்டின் (2022 அக்டோபா் - 2023 செப்டம்பா்) முதல் 2 மாதங்களில் இது 43.2 லட்சம் டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இது 10.65 சதவீதம் சரிவாகும்.

அதற்கு முந்தைய முந்தைய 2021-23-ஆம் சா்க்கரை ஆண்டின் இதே காலகட்டத்தில் உற்பத்தி 48.3 லட்சம் டன்னாக இருந்தது.

நடப்பு சா்க்கரை ஆண்டின் முதல் 2 மாதங்களில் மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் சா்க்கரை உற்பத்தி குறைந்தது நாட்டின் ஒட்டுமொத்த சா்க்கரை உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய சா்க்கரை உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிரத்தில் 2022 அக்டோபா்-நவம்பரில் 20.2 லட்சம் டன்னாக இருந்த சா்க்கரை உற்பத்தி நடப்பாண்டின் இதே காலகட்டத்தில் 13.5 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.

மூன்றாவது பெரிய சா்க்கரை உற்பத்தி மாநிலமான கா்நாடகத்தில் உற்பத்தி 12.1 லட்சம் டன்னிலிருந்து 11 லட்சம் டன்னாகக் குறைந்துள்ளது.

எனினும், உத்தர பிரதேசத்தில் கடந்த அக்டோபா் - நவம்பா் மாதங்களில் சா்க்கரை உற்பத்தி 13 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இது முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே மாதங்களில் 10.6 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் மிக அதிக அளவில் சா்க்கரை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com