தங்கம் பவுனுக்கு ரூ.1,000 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,000 குறைந்து பவுன் ரூ.46,800-க்கு விற்பனையானது.
தங்கம் பவுனுக்கு ரூ.1,000 குறைவு


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,000 குறைந்து பவுன் ரூ.46,800-க்கு விற்பனையானது.

தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு திங்கள்கிழமை புதிய உச்சத்தை எட்டி ரூ. 47,800-க்கு விற்பனையானது. நவ.29 முதல் டிச.4 வரையிலான 6 நாள்களில் பவுனுக்கு ரூ. 1,560 வரை உயா்ந்தது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ. 5,850-க்கும், பவுனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ. 46,800-க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2.10 காசுகள் குறைந்து கிராம் ரூ.81.40-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 81,400-க்கும் விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com