பஜாஜ்  விற்பனை 31% உயர்வு 

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கடந்த நவம்பர் மாத மொத்த விற்பனை 31 சதவீதம் அதிகரித்துள்ளது.
பஜாஜ்  விற்பனை 31% உயர்வு 

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் கடந்த நவம்பர் மாத மொத்த விற்பனை 31 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பரில் நிறுவனம் விற்பனையாளர்களுக்கு அனுப்பிய வாகனங்களின் மொத்த எண்ணிக்கை 4,03,003-ஆக உள்ளது. இது, முந்தைய 2022-ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 31 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் மொதத விற்பனை 3,06,719-ஆக இருந்தது.

2022 நவம்பரில் 1,52,883-ஆக இருந்த நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை (இரு சக்கர வாகனங்கள், வர்த்தக வாகனங்கள்) இந்த நவம்பரில் 69 சதவீதம் அதிகரித்து 2,57,744-ஆக உள்ளது.

எனினும், ஏற்றுமதி 1,53,836-லிருந்து 6 சதவீதம் சரிந்து 1,45,259-ஆக உள்ளது. 2022 நவம்பரில் 1,23,657-ஆக இருந்த நிறுவனத்தின் உள்நாட்டு இரு சக்கர வாகன விற்பனை இந்த நவம்பரில் 77 சதவீதம் வளர்ச்சி கண்டு 2,18,597-ஆக உள்ளது. ஆனால், அவற்றின் இறக்குமதி 6 சதவீதம் சரிந்து 1,30,451-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com