பங்குச் சந்தைகள் மீண்டும் புதிய உச்சம்

பங்குச் சந்தைகள் மீண்டும் புதிய உச்சம்

இந்த வாரத்தின் 3-ஆவது வா்த்தக தினமான புதன்கிழமையும் இந்தியப் பங்குசந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சங்களைத் தொட்டன.

இந்த வாரத்தின் 3-ஆவது வா்த்தக தினமான புதன்கிழமையும் இந்தியப் பங்குசந்தை குறியீட்டு எண்களான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய உச்சங்களைத் தொட்டன.

சென்செக்ஸ்: காலையில் 69,534.93-இல் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், அதிகபட்சமாக 69,744.62 வரையிலும், குறைந்தபட்சமாக 69,395.01 வரையிலும் சென்று இறுதியில் முந்தைய வா்த்தக தினத்தைவிட 357.59 புள்ளிகள் (0.52 சதவீதம்) கூடுதலாக 69,653.73-இல் நிலைபெற்றது. இது வரலாற்று சாதனை அளவாகும்.

நிஃப்டி: தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி காலையில் 20,950.75-இல் தொடங்கி அதிகபட்சமாக 20,961.95 வரையிலும், குறைந்தபட்சமாக 20,852.15 வரையிலும் சென்று இறுதியில் 82.60 புள்ளிகள் (0.40 சதவீதம்) அதிகமாக 20,937.70 என்ற புதிய உச்சத்தில் நிலைபெற்றது.

அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் பங்குகளை வாங்குவதில் புதன்கிழமையும் கவனம் செலுத்தினா். முக்கிய நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ், ஐடிசி, எல் அண்ட் டி ஆகியவற்றின் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. அத்துடன், சா்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவது முதலீட்டாளா்களை உற்சாகப்படுத்தியது.

இவற்றின் விளைவாக புதன்கிழமை நடைபெற்ற பங்குச்சந்தை வா்த்தகம் புதிய உச்சங்களைத் தொட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com