
மும்பை: மும்பையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் யெஸ் வங்கியின் நிகர லாபம் கடந்த செப்டம்பர் காலாண்டில் 48 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ரூ.160.41 கோடியாக உள்ளது.
முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு
ஒப்பிடுகையில் இது 48 சதவீதம் அதிகமாகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.347 கோடியாக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.1,925 கோடியாக உள்ளது. கடன் பட்டுவாடா வளர்ச்சி விகிதம் 11.2 சதவீதமாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...