அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.26 ஆக சரிவு!

மந்தமான பங்குச் சந்தை வர்த்தகம் மற்றும் தொடர்ந்து அன்னிய நிதி வெளியேற்றம் ஆகியவையால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ.83.26 ஆக சரிந்தது வர்த்தகமானது.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.26 ஆக சரிவு!

மும்பை: மந்தமான பங்குச் சந்தை வர்த்தகம் மற்றும் தொடர்ந்து அன்னிய நிதி வெளியேற்றம் ஆகியவையால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ரூ.83.26 ஆக சரிந்தது வர்த்தகமானது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.26 ஆகத் தொடங்கி இறுதியாக அதே மட்டத்தில் நிலைபெற்றது.

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் ரூபாயின் மதிப்பு 83.5ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.83.27ஆகவும் இருந்தது. நேற்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா சரிந்து ரூ.83.26ஆக வர்த்தகமானது. 

சர்வதேச கச்சா எண்ணெய் குறியீடான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 0.90 சதவிகிதம் உயர்ந்து 88.24 டாலராக உள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 237.72 புள்ளிகள் சரிந்து 63,874.93 புள்ளிகளாக உள்ள நிலையில் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் 61.30 புள்ளிகள் சரிந்து 19,079.60 புள்ளிகளாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com