வர்த்தகம் 2024
ஜனவரி
7: புதுப்பிக்கத்தக எரிசக்தி உற்பத்திக்காக தமிழகத்தில் ரூ.55,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக டாடா பவர் நிறுவனம் அறிவித்தது. அதற்காக மாநிலத்தில் 10 ஜிகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலைகள் மற்றும் சூரிய மின் உற்பத்தி ஆலைகளை அமைக்கவிருப்பதாக நிறுவனம் கூறியது.
15: அறிதிறன் பேசிகளின் (ஸ்மார்ட்போன்) சர்வதேச விற்பனையில் ஆப்பிள் நிறுவனத்தை சாம்சங் முந்தியது. 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஆப்பிளின் ஐ-போன் விற்பனை 10 சதவீததம் சரிந்தது. சாம்சங் அறிதிறன் பேசிகளின் விற்பனை 7.8 சதவீதம் அதிகரித்து 28.94 கோடியாக இருந்தது.
மார்ச்
4: டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தன்னை இரு தனி நிறுவனங்களாகப் பிரித்துக்கொள்வதாக அறிவித்தது. தனது வர்த்தக வாகனத் தயாரிப்பு நடவடிக்கைகளை ஒரு நிறுவனம் மூலமும், டாடா, ஜாகுவார், லேண்ட் ரோவர் ஆகிய பயணிகள் வாகனத் தயாரிப்பு தொடர்பான நடவடிக்கைகளை மற்றொரு நிறுவனம் மூலமும் தொடரவிருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்தது.
31: பனாரஸ் தண்டாய் குளிர்பானம், அஸாம் அசரிகாண்டி மண்பாண்டங்கள் உள்ளிட்ட இந்தியாவின் 60-க்கும் மேற்பட்ட பொருள்களுக்கு புவிசார் குறியீடுகள் வழங்கப்பட்டன.
ஜூன்
4: மக்களவைத் தேர்தல் முடிவுகளால் சென்செக்ஸ் 4,389 புள்ளிகள் சரிவு.
10: ஆய்வு அமைப்பான ஸ்டார்ட்அப் ஜெனோம் வெளியிட்ட புத்தாக நிறுவனங்களைத் தொடங்குவதற்கேற்ற மிகச் சிறந்த ஆசிய நகரங்களின் பட்டியலில் சென்னை 18-ஆவது இடத்தைப் பிடித்தது.
ஜூலை
3: ட்விட்டர் சமூக ஊடகத்துக்கு (தற்போது எக்ஸ்) மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட 'கூ' ஊடகம் மூடப்பட்டது.
5: சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் உலகின் முதல் இரு சக்கர வாகனமான ஃப்ரீடம் பஜாஜ் நிறுவனத்தால் அறிமுகப்படுததப்பட்டது.
அக்டோபர்
4: இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு முதல்முறையாக 70,000 கோடி டாலரைத் தாண்டியது.
17: தென் கொரிய வாகனத் தயாரிப்பாளார் ஹூண்டாயின் இந்தியப் பிரிவான ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.27,870 கோடியைத் திரட்டுவதற்கான பொதுப் பங்கு வெளியீட்டை மேற்கொண்டது.
நவம்பர்
1: இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகை பருவத்தில் சிவகாசி மற்றும் அதச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு விற்பனை 6,000 கோடியைக் கடந்தது. இது, முந்தைய ஆண்டின் பண்டிகைக் காலத்தைவிட 5 முதல் 7 சதவீதம் வரை அதிகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.