பவர் கிரிட்டிடமிருந்து ரூ.737 கோடி ஆர்டரைப் பெற்ற ஸ்கிப்பர் லிமிடெட்

மின் பரிமாற்ற திட்டத்திற்கு பவர் கிரிட் நிறுவனத்திடமிருந்து பெரும் ஒப்பந்தம்
பவர் கிரிட்டிடமிருந்து ரூ.737 கோடி ஆர்டரைப் பெற்ற ஸ்கிப்பர் லிமிடெட்
Published on
Updated on
1 min read

கொல்கத்தா: மின் பரிமாற்றம் மற்றும் விநியோக கட்டமைப்புகளுக்கான முன்னணி உற்பத்தியாளர்களான ஸ்கிப்பர் லிமிடெட், மத்திய பொதுத்துறை நிறுவனத்திற்கான அதிநவீன 765 கிலோவோல்ட் டிரான்ஸ்மிஷன் லைனை வடிவமைத்தல், வழங்கல் மற்றும் கட்டுமானத்திற்காக பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் இடமிருந்து ரூ.737 கோடி மதிப்புள்ள ஆர்டரைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஸ்கிப்பர் இயக்குநர் சரண் பன்சால் மின் பரிமாற்றம் மற்றும் விநியோகத் துறையில் இந்த சாதனை குறித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அதே வேளையில் தொழில்துறையில் நிறுவனத்தின் நம்பிக்கையான கண்ணோட்டத்தை வலியுறுத்தியுள்ளார்.

பாலிமர் தாயரிப்பிலும் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், டிசம்பர் 2023 உடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாபம் 115 சதவிகிதம் உயர்ந்து ரூ.20.4 கோடியாக இருப்பதாக அறிவித்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ.9.5 கோடியிலிருந்து அதிகரித்துள்ள நிலையில் நிறுவனத்தின் வருவாயும் இந்த காலாண்டில் 80 சதவிகிதம் உயர்ந்து ரூ.801 கோடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com