பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அலுவலராக (சிஓஓ) சுகன்யா சதாசிவன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இளங்கலை பெற்ற இவர், டாடா டெக்னாலஜீஸில் இணைவதற்கு முன்பு டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தில் மூத்த துணை தலைவராகவும், தலைமை தகவல் அலுவலராகவும் பணியாற்றியுள்ளார்.
33 ஆண்டுகளுக்கு மேலாக டிசிஎஸ்ஸில் பணியாற்றி வருகிறார். டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் சேவை வழங்குதல், பயிற்சி மற்றும் உள்துறை சார்ந்த டிஜிட்டல் மற்றும் ஐடி அமைப்புகளுக்கு இவர் பொறுப்பாவார்.
டாடா தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வாரன் ஹாரிஸுக்கு இவர் பணி குறித்த அறிக்கைகள் அளிக்க வேண்டும்.
நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இவரது நுண்ணறிவு மற்றும் வழிகாட்டுதல் உதவும் என வாரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.