இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

காலமானார் பேராசிரியர் தளபதி

தமிழ்ப் பேராசிரியர் சு. தளபதி (47) மாரடைப்பு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை (மார்ச் 11) அதிகாலை

Updated On :12 மார்ச் 2013, 3:54 am IST

தமிழ்ப் பேராசிரியர் சு. தளபதி (47) மாரடைப்பு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை (மார்ச் 11) அதிகாலை காலமானார்.

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த் துறை தலைவராக அவர் பணியாற்றி வந்தார். அவருக்கு அபிராமி என்ற மனைவியும், சுகதேவ் என்ற மகனும், சுதமதி என்ற மகளும் உள்ளனர்.

பாபநாசத்தில் உள்ள திருவள்ளுவர் கலை அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பட்டமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றுள்ளார்.

திருப்போரூர் முருகன் கோயில் வரலாற்றைத் தொகுத்ததிலும், முருக வழிபாடு குறித்த பன்னாட்டு கருத்தரங்கம் நடத்தியதிலும் இவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.