/
சாலைவிபத்தில் விமானப்படை போலீஸ்காரர் உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தாம்பரம் ஜி.3 விமானப்படையில் போலீஸாக (எல்.ஏ.சி பிரிவில்) பணிபுரிந்து வருபவர் சோனுவர்மா (22). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பியபோது பன்றியின் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் கீழே விழுந்த சோனுவர்மா பலத்த காயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர் உயிரிழந்தார். பல்லாவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸôர் விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









