/

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

சென்னை அயனாவரத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :11 ஏப்ரல் 2013, 9:46 pm

சென்னை அயனாவரத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

வில்லிவாக்கம் கிழக்கு மாடவீதியைச் சேர்ந்தவர் கமலஹாசன். இவரது மனைவி ஹேமமாலினி. இவர்கள் இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயர்களாக அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். புதன்கிழமை இரவு பணிமுடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அயனாவரம் சிக்னல் அருகே, ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சாலை ஓரத்தில் கமலஹாசன் மோட்டார் சைக்கிளை நிறுத்தினார்.

கமலஹாசன் ஏ.டி.எம். மையத்துக்குள் பணம் எடுக்கச் சென்ற நேரத்தில் அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் ஹேமமாலினி கழுத்தில் கிடந்த ரூ.1.40 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டனர்.

இது குறித்து ஹேமமாலினி அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.