கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

அடையாறு மண்டல மழைநீர் வடிகால்வாய் பணி

அடையாறு மண்டலத்தின் 174-வது வார்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

Updated On :2 மே 2013, 5:10 am IST

அடையாறு மண்டலத்தின் 174-வது வார்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.

அடையார் மண்டலத்தின் 174-வது வார்டில் உள்ள மசூதி காலனி மற்றும் நரசிங்கபுரம் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை ஆய்வு செய்து மேயர் சைதை துரைசாமி கூறியது: சென்னை மாநகராட்சியில் கடந்த 18 மாதங்களில் ரூ. 3 ஆயிரம் கோடிக்கு மேல் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

மழைக் காலங்களில் மழைநீர் சாலைகளில் தேங்காமல் செல்வதற்காக அடையாறு மண்டலத்தில் ரூ.85 கோடியில் 52 கி.மீ. தூரத்திற்கு 130 பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், ரூ. 48 கோடியில் 39 கி.மீ. பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதம் உள்ள பணிகளை விரைவில் முடிப்பதற்கு மாநகராட்சி பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

இந்த ஆய்வின்போது கூடுதல் ஆணையர் பிரஜேந்திர நவ்நீத், மேற்பார்வை பொறியாளர் வேணுகோபால், மண்டல குழுத் தலைவர் முருகன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.