விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் வியாழக்கிழமை நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மரக்காணம் கலவரம் தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதால் ஆர்ப்பாடம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மே 7 -ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி தியாகராயர் அரங்கில் மக்கள் ஒற்றுமை மாநாடு நடைபெற உள்ளது.
அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர்.நல்லகண்ணு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









