வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கலாúக்ஷத்ரா இயக்குநராக பிரியதர்ஷினி கோவிந்த் நியமனம்

சென்னை பெசன்ட் நகரில் உள்ள கலாúக்ஷத்ரா நிறுவனத்தின் இயக்குநராக நடனக் கலைஞர் பிரியதர்ஷனி கோவிந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On :11 ஜூலை 2013, 9:56 pm

சென்னை பெசன்ட் நகரில் உள்ள கலாúக்ஷத்ரா நிறுவனத்தின் இயக்குநராக நடனக் கலைஞர் பிரியதர்ஷனி கோவிந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரம்பரிய இசை மற்றும் நடனத்தை பயிற்றுவிக்கும் நிறுவனமான கலாúக்ஷத்ரா பவுண்டேஷனை ருக்மணிதேவி அருண்டேல் 1936-ஆம் ஆண்டு தொடங்கினார்.

மத்திய கலாசாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்நிறுவனத்தின் இயக்குநராக இருந்த லீலா சாம்சன் பதவி விலகியதைத் தொடர்ந்து தாற்காலிக இயக்குநராக கருணாகர் மேனன் செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில் புதிய இயக்குநராக சென்னையைச் சேர்ந்த நடனக் கலைஞர் பிரியதர்ஷினி கோவிந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்குவங்க மாநிலத்தின் முன்னாள் ஆளுநரும், கலாúக்ஷத்ரா பவுண்டேஷனின் தலைவருமான கோபாலகிருஷ்ண காந்தி இதனை புதன்கிழமை அறிவித்தார்.

பிரிதர்ஷினி கோவிந்த் உலகம் முழுவதும் நடன நிகழ்ச்சிகளை நடத்தியவர். ஸ்ரீகிருஷ்ணகான சபாவின் நிருத்யசூடாமணி (1998), தமிழக அரசின் கலைமாமணி (1998), யுவகலா பாரதி (2000) உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் விரைவில் பொறுப்பேற்க இருப்பதாக கலாúக்ஷத்ரா நிறுவனம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.