சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சிப் பள்ளியில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இரண்டு ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
ராணுவ பயிற்சிப் பள்ளியில் ராணுவ வீரர்கள் பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராமல் ஏணி அருகிலிருந்த மின்சார கம்பியில் பட்டது. இதில் இமாசலப் பிரதேசம், பதேபூர் மாவட்டம் குர் கிராமத்தைச் சேர்ந்த ஹவில்தார் டர்சிம் சிங், உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம், கோக்னா கிராமத்தைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர் மன்வர் சிங் ஆகிய இருவரும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஜூலை 17-ஆம் தேதி உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் ஹவில்தார் சுஷில்சிங், நாயக் ராஜேந்திரசிங் ஆகியோர் காயமடைந்தனர்.
தடுப்பணை சுற்றுச்சுவர் விபத்து:சேலம் மாவட்டம் வேப்பிலைப்பட்டி கிராமம் வெள்ளாள குண்டம் காப்புக்காடு அருகே வனக்காவலர் முருகன் தடுப்பணை பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது, சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்ததில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வெள்ளாளகுண்டம் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்த தேவகி என்பவர் காயமடைந்தார்.
சுற்றுச்சுவர் இடிந்துவிழுந்த விபத்தில் உயிரிழந்த முருகன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சமும், காயமடைந்த தேவகி மற்றும் சுஷில்சிங், ராஜேந்திர சிங் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோவாளை பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தும் அதிமுக நிறைவேற்றும்: பி. தங்கமணி

ஜீயரிடம் ஆசி....

திருவாளபுத்தூரில் தோ்தலை புறக்கணிக்க முடிவு: வீடுகளில் கருப்புகொடி கட்டி ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


