வங்கிகளுக்கு எதிராக பதிவாகும் புகார்களின் எண்ணிக்கை நடப்பு நிதியாண்டில் (2013-14) 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் "வங்கி குறைதீர்ப்பாயத் துறை' (ஆஃபீஸ் ஆஃப் பேங்கிங் ஆம்பட்ஸ்மேன்) தெரிவித்துள்ளது.
இந்த நிதியாண்டில் சராசரியாக மாதமொன்றுக்கு 850 புகார்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்டுகள் குறித்த புகார்களே அதிக அளவில் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.
"வங்கி குறைதீர்ப்பாயம்' குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிகரித்ததன் காரணமாகவே புகார்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தேசியமயாக்கப்பட்ட வங்கிகள் மீதான புகார்கள் அதிகம்: கடந்த நிதியாண்டில் (2012-13) மொத்தமாக 7255 புகார்கள் பதிவாகின. இதில் பாரத வங்கி மற்றும் பிற தேசியமாக்கப்பட்ட வங்கிகளின் மீதான புகார்கள் 62 சதவீதமாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் தொடக்கத்திலிருந்தே தேசிய வங்கிகளின் மீதான புகார்கள்தான் அதிகமாக வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டில் கிராமப்புறங்களில் இருந்து பதிவான புகார்களின் எண்ணிக்கை உயர்ந்திருந்தது.
அதே போல தற்போதும், கிராமங்கள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இருந்து வரும் புகார்கள் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து வங்கி குறைதீர்ப்பாளர் சுஜாதா எலிசபெத் பிரசாத் கூறியது:-
இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் கடந்த நிதியாண்டில், ஆரணி, மதுராந்தகம், பெரம்பலூர், காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
ஒவ்வொரு காலாண்டுக்கும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக கிராமப்புறங்களில் இருந்து வரும் புகார்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.
கடந்த நிதியாண்டில் பதிவான மொத்தப் புகார்களில் 30 சதவீதப் புகார்களை கிராமப்புறம் மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பதிவு செய்திருந்தனர். பெரும் நகரங்களில் இருந்து 32 சதவீதமும், நகரங்களில் இருந்து 38 சதவீதமும் புகார்கள் பதிவாகின.
40 சதவீதம் அதிகம்: கடந்த நிதியாண்டில் மாதந்தோறும் சராசரியாக 605 புகார்கள் பதிவாகின. இந்த நிதியாண்டில் அது 850-ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் சராசரியைக் காட்டிலும் 40 சதவீதம் அதிகமாகும்.
பொதுவாக கிரெடிட் மற்றும் ஏ.டி.எம். கார்டுகள், கல்வி கடன்கள் தொடர்பான புகார்களே அதிகளவில் பதிவாகின்றன. வங்கிகள் மீது புகார் அளிப்பது குறித்து பல வாடிக்கையாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. கடன் விண்ணப்பப் படிவங்களை முறையாகப் படித்தாலே பெரும்பாலான புகார்களை வாடிக்கையாளர்களே நிவர்த்தி செய்ய முடியும்.
நிதி குறித்த போதிய விழிப்புணர்வு மக்களிடையே அதிகரிக்க வேண்டும். இதற்காக ரிசர்வ் வங்கி மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக வங்கிகள் மீது பதிவாகும் புகார்களின் எண்ணிக்கை இந்த நிதியாண்டில் அதிகரித்து வருகிறது என்றார் அவர்.
புகார்களை எங்கு பதிவு செய்யலாம்?
வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை முதலில் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தெரிவிக்க வேண்டும். அதன் பேரில் 1 மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் வங்கி குறைதீர்ப்பாயத்தின் கீழ்கண்ட முகவரியில் மேல்முறையீடு செய்யலாம்.
வங்கி குறைதீர்ப்பாளர், வங்கி குறைதீர்ப்பாயம் ( ஆஃபிஸ் ஆஃப் தி பேங்கிங் ஆம்பட்ஸ்மேன்), இந்திய ரிசர்வ் வங்கி (2-வது தளம்), 16, ராஜாஜி சாலை, சென்னை-600 001
தொலைபேசி: 044 - 253991709159. மின்னஞ்சல்: 044 - 25395488 இ-மெயில்: க்ஷர்ஸ்ரீட்ங்ய்ய்ஹண்ஃழ்க்ஷண்.ர்ழ்ஞ்.ண்ய் bochennai@rbi.org.in http://rbi.org.in/commonman/English/Scripts/AgainstBank.aspx என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளப் பக்கத்திலும் புகார்களை பதிவு செய்யலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பிகாரில் பல வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் பலி, 25 பேர் காயம்

சஞ்சு சாம்சன் சதம் விளாசல்; தில்லி கேபிடல்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

பிரதமர் வேட்பாளராக இருந்த அருமைச் சகோதரர் ராகுல் காந்தி! - முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

நாங்கள் ஒன்றாக பிரசாரம் செய்வதை பார்த்து சிலர் பயத்தின் உச்சத்தில் உள்ளனர்: டிடிவி தினகரன்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

