தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஆட்டோ கட்டணம்: முத்தரப்பு கமிட்டி அமைக்க கோரிக்கை

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குப் ஏற்ப ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான முத்தரப்பு கமிட்டியை தமிழக அரசு அமைக்க வேண்டும் என தமிழக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

Updated On :1 செப்டம்பர் 2013, 11:44 pm

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குப் ஏற்ப ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைப்பதற்கான முத்தரப்பு கமிட்டியை தமிழக அரசு அமைக்க வேண்டும் என தமிழக நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் அமைப்பின் சென்னை மாவட்டத் தலைவர் பால் பர்னபாஸ் பேசியது:

கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி திருத்தியமைக்கப்பட்ட ஆட்டோ கட்டணம் வெளியிடப்பட்டது. இந்தக் கட்டண நிர்ணயம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையம் முன்வைத்த கோரிக்கைகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி உள்ளார்.

புதிய கட்டண விகிதம் நுகர்வோர் மற்றும் ஆட்டோ தொழிலாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதம்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது.

தற்போது தமிழக அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். இதற்கென தமிழக அரசு முத்தரப்பு குழுவை அமைக்க வேண்டும். சென்னையைப் போல் மற்ற மாவட்டங்களிலும் ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றார். கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.