சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நடைபாதைகளில் கிரானைட் கற்கள் பதிப்பு: பி.எஸ்.என்.எல்., மின் வாரியம் அதிருப்தி

சென்னை நடைபாதைகளில் கிரானைட் கற்கள் பதிக்கும் பணியால் சென்னை தொலைபேசி மற்றும் மின் சேவையில் கடும் பாதிப்பு ஏற்படும் என அந்தத் துறைகளின் அதிகாரிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

Updated On :1 செப்டம்பர் 2013, 9:29 pm

சென்னை நடைபாதைகளில் கிரானைட் கற்கள் பதிக்கும் பணியால் சென்னை தொலைபேசி மற்றும் மின் சேவையில் கடும் பாதிப்பு ஏற்படும் என அந்தத் துறைகளின் அதிகாரிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

சென்னை மாநகரில் பாதசாரிகளுக்கு வசதிக்காக பஸ் வழித்தடங்களில் உள்ள நடைபாதைகளில் கிரானைட் கற்கள் பதிக்கும் பணியைச் சென்னை மாநகராட்சி மேற்கொள்ள உள்ளது.

இப்பணிக்காக புரசைவாக்கம், எழும்பூர், அண்ணாசாலை, சூளை, தியாகராய நகர், தண்டையார்பேட்டை உள்ளிட்ட 71 இடங்களில் அண்மையில் ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் 1,110 மின் இணைப்புப் பெட்டிகள், 89 மின் மாற்றிகள், 293 தொலைபேசி இணைப்புப் பெட்டிகள், 61 போக்குவரத்து சிக்னல்கள் ஆகியவை கிரானைட் கற்கள் பதிக்கும் பணிக்கு இடையூறாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இவற்றை வேறு இடங்களுக்கு மாற்றித் தர வேண்டும் என பி.எஸ்.என்.எல். (சென்னை வட்டம்), தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் போக்குவரத்துக்குக் காவல் துறை ஆகியவற்றுக்கு சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. மாநகராட்சியின் இந்த அறிவிப்பால் மின்வாரியம் மற்றும் பி.எஸ்.என்.எல், நிர்வாகங்கள் கடும் அதிருப்தியடைந்து உள்ளன.

இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., உயரதிகாரி ஒருவர் கூறியது.

சென்னை மாநகர் முழுவதும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்குச் சொந்தமான பெரிய அளவிலான கேபிள்கள் பூமிக்குள் பதிக்கப்பட்டுள்ளன. இவை 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்டவை.

ஏற்கெனவே கேபிள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால் இணைப்பில் ஏற்படும் பழுதை சரிசெய்வதில் சிரமம் உள்ளது. இந்த நிலையில் தற்போது நடைபாதைகளில் கிரானைட் கற்கள் பதித்தால் கேபிள் இணைப்பில் பழுது ஏற்படும்போது அவற்றை சரிசெய்வது கடினம்.

கிரானைட் கற்களை உடைத்து பழுது நீக்கினால் அதற்கான அதிகத் தொகையையும் பி.எஸ்.என்.எல். நிர்வாகம் வழங்க வேண்டியிருக்கும். மாநகராட்சி அறிவுறுத்தியதுபோல் பதிக்கப்பட்ட கேபிளை இடம் மாற்றுவதும் கடினம். இந்த நடைமுறைச் சிக்கலை தவிர்க்கும் வகையில் தொலைபேசி இணைப்புப் பெட்டிகள் வழியாக போகும் நடைபாதைகளில் இடம்விட்டு கிரானைட் கற்களை பதிக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து மின்வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியது: சென்னை மாநகரில் மின் இணைப்புகளுக்கான அனைத்து கேபிள்களும் பூமிக்குள்தான் புதைக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே மாநகரில் தெருக்களில் போடப்பட்ட கான்கிரீட் சாலைகளால் மின் கேபிளில் பழுது ஏற்படும்போது கான்கிரீட்டை உடைத்து பழுதைச் சரிசெய்ய பல மணி நேரம் ஆகிறது.

இந்த நிலையில் மின் இணைப்பு கேபிள்களுக்கு மேல் கிரானைட் கற்களைப் பதித்தால் மின் தடை தொடர்பான பழுதுகளை சரிபார்க்கும் பணியில் மேலும் சிக்கல் ஏற்படும். எனவே கேபிள்களில் பழுது ஏற்பட்டால் பழுது நீக்குவதற்கு வசதியாக இடம்விட்டு கற்களைப் பதிக்க வேண்டும் என்றார்.

மாநகரில் உள்ள பெரும்பாலான நடைபாதைகள் ஒன்றரை அடி முதல் ஒன்றரை முக்கால் அடி அளவுதான் அகலம் உள்ளன.

இதிலும் ஆக்கிரமிப்புகள் அதிகம். இவற்றை அகற்றி மின் கேபிள் மற்றும் தொலைபேசி கேபிள் செல்லுவதற்கான வசதிகளை ஏற்படுத்திய பின்னர் கிரானைட் கற்கள் பதிக்கும் பணியை மாநகராட்சி மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறைகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.