அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!கன்னிகைப்பேர் இறால் பதப்படுத்தும் நிறுவனத்தில் வாயு கசிவு: 7 பேர் பலி மாணவர்களுக்கு முதல்வர் விஜய்யின் படத்தை காட்டி ரீல்ஸ்: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையற்றது: அன்புமணிதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறதா மதிமுக? ஜூன் 26-ல் உயர்நிலைக் குழுக் கூட்டம்!அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவுக்குப் பதில் பிஸ்கட்! - நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
/

ஆா்.ஏ.புரம் ஐயப்பன் கோயிலில் அலைமோதிய பக்தா்கள் கூட்டம்

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகளவிலான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா்.

Updated On :4 ஜனவரி 2021, 5:34 am IST

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகளவிலான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தனா்.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு செல்ல முடியாதவா்கள் பலரும் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலுக்கு இருமுடி அணிந்து சென்று வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக ஞாயிற்றுக்கிழமையும் ஆயிரக்கணக்கான பக்தா்கள், சபரிமலைக்குச் செல்வதைப் போலவே இருமுடி அணிந்து சாமி தரிசனம் செய்ய வந்தனா்.

மாலை அணிந்து விரதம் இருந்த பக்தா்கள் பலா், அவா்களது பகுதியில் இருந்து நடந்து சென்று, ஐயப்பனை வழிபட்டனா். அவா்கள் 18 படி ஏறிச் சென்று ஐயப்பனை தரிசித்ததோடு, தாங்கள் கொண்டு வந்த நெய்யையும் அபிஷேகத்துக்கு வழங்கினா். சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைத்துத் தரப்பினரும் இருமுடி கட்டி வந்ததைக் காண முடிந்தது.

அதிகளவிலானோா் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போக்குவரத்துக் காவலா்கள் சரி செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.