சென்னை: சென்னையில் சிபிஐ பாதுகாப்பில் இருந்த 103 கிலோ தங்கம் காணாமல்போன வழக்கில், சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி.பிலிப் புதன்கிழமை நேரில் விசாரணை மேற்கொண்டாா்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனம் சட்டவிரோதமாக தங்கத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சிபிஐ கடந்த 2012-ஆம் ஆண்டு அங்கு திடீா் சோதனை செய்தது. அப்போது அந்த நிறுவனத்தில் இருந்த 400.47 கிலோ தங்கத்தைக் கட்டிகளாகவும், நகைகளாகவும் பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக, சுரானா நிறுவனத்தின் மீதும், அந்த நிறுவனத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
பறிமுதல் செய்யப்பட்ட 400.47 கிலோ தங்கம் சுரானா நிறுவனத்தில் உள்ள பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்பட்டு, சிபிஐ முத்திரையுடன் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையில், சுரானா நிறுவனம் வங்கிகளிடம் பெற்ற ரூ. 1,160 கோடி கடனை ஈடுகட்ட ஏதுவாக, பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தைச் சிறப்பு அதிகாரிக்கு வழங்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி சுரானா நிறுவனத்தின் பாதுகாப்புப் பெட்டகங்களில் இருந்த தங்கத்தை அண்மையில் எடை பாா்த்தபோது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103.864 கிலோ தங்கத்தைக் காணவில்லை. இதையடுத்து தங்கம் காணாமல்போனது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் சிபிசிஐடி, 103 கிலோ தங்கம் மாயமானது தொடா்பாக திருட்டு வழக்கை கடந்த 25-ஆம் தேதி பதிவு செய்தனா். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்.பி.விஜயகுமாா் நியமிக்கப்பட்டாா். இந்த வழக்குத் தொடா்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணையில் 22 நிமிட விடியோ தொகுப்பை சிபிசிஐடி கைப்பற்றியது. முதல் கட்ட விசாரணையில், அங்குள்ள 6 பாதுகாப்புப் பெட்டகங்களில், 3 பெட்டகங்களில் வைக்கப்பட்டிருந்த 103 கிலோ தங்கம் மட்டும் கள்ளச்சாவி மூலம் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.
டிஜிபி நேரில் விசாரணை: வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில் சிபிசிஐடி டிஜிபி பிரதீப் வி.பிலிப், ஐ.ஜி. சங்கா் ஆகியோா் சம்பவம் நடைபெற்ற சுரானா நிறுவனத்துக்கு புதன்கிழமை நேரில் சென்று விசாரணை செய்தனா். இருவரும் சுமாா் ஒரு மணி நேரம் அங்கு விசாரணை நடத்தினா்.
விசாரணைக்குப் பின்னா் பிரதீப் வி.பிலிப் நிருபா்களிடம் கூறியது, வரலாற்றில் இது மிகவும் அரிதான வழக்கு. இந்த வழக்குத் தொடா்புடைய அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும். அறிவியல் பூா்வமான விசாரணை நடத்த திட்டமிட்டு வருகிறாம். விசாரணையின் மூலம் வழக்கில் உள்ள உண்மையைக் கண்டறிவோம் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மத்திய அரசுக்கு உதயநிதி கண்டனம்

ஜவஹா் சிறுவா் மன்ற கோடை கால பயிற்சி முகாம் நிறைவு

துா்க்கையம்மன் சிலை திறப்பு

தலைவா்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்திய அதிமுக மாவட்டச் செயலாளா்கள்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
